Tuesday, 14 June 2016

நல்லுரில் என்ன நடக்குது? அவங்க கழிப்பறை பாதுகாப்பானதா?




நல்லூர் கிராமத்து VPRC பெண்கள் கூட்டத்திற்கு தயாராகின்றனர்.
பார்வதி: நேத்து தான் பயிற்சி முடிச்சி ஊருக்கு வந்திருக்கேன்
மலர்: என்ன பயிற்சி அக்கா?
பார்வதி: பாதுகாப்பான கழிப்பறையை கட்டறது, அதை நம்ம ஊர் மக்கள்கிட்ட எப்படி எடுத்திட்டு போகறது பத்தி பயிற்சி நடத்தினாங்க.
மலர் பார்வதியிடம் பேசுகிறாள்…
மலர்:பாதுகாப்பான கழிப்பறைன்னா என்ன அக்கா?
 பார்வதி: கழிப்பறை கட்டறது ரொம்ப அவசியம் அதுவும், உறிஞ்சிக்குழி முறையில கட்டறதால நிறைய நன்மைகள் கொடுக்கும்ன்னு சொல்லியிருக்காங்க, அதான் ரொம்ப முக்கியமா நம்ம ஊர் மக்கள் கிட்ட சொல்ல ஆரம்பிக்கனும்
கூட்டத்தில் சிறிய பெண் ஒருவள் எழுந்து நிற்கிறாள்
ஷோபி :அது என்ன, உறிஞ்சிக்குழி முறை ? கொஞ்சம் விவரமா சொல்லுங்க?
பார்வதி கூட்டத்தில் விளக்கமாக எடுத்துரைக்கிறாள்
பார்வதி: லீச் பிட்ங்கிறது என்னன்னா, 3 அடி ஆழத்துல , 1 மீ விட்டத்தில 2 குழித் தோண்டனும், உறிஞ்சுக்குழியை இதுல அமைக்கிறோம். அதுனால நம்பளோட கழிவுகள் இருக்கிற தண்ணீ எல்லாம் ஒரு பக்கமா போயிடும், வெறும் மண்ணுதான் அடியில போய் தங்கும்.
மலர் பார்வதியிடம்
மலர்: அக்கா, அதுக்கு ஏன் 2 குழிகள் ? பார்வதி: 2 குழி எதுக்குன்னா, முதல நாம ஒரு குழியைத் தான் பயன்படுத்துவோம், 5-6 வருஷத்துல அது ரொம்பிடும், அப்பறம் அதுக்கு போற இணைப்பை மூடிட்டு, இன்னொரு குழியை திறந்து விடலாம். முதல மூடின குழியிலிருந்து சேகரிக்கப்பட்ட கழிவு, நல்ல தரமான இயற்கை உரமா மாறும். அது நம்ம நிலத்துக்கு ஊட்டச்சத்தா இருக்கும்.
கூட்டத்தில் ஒருவர் பார்வதியிடம்
பெண் 1: இந்த மாதிரி அமைக்கும் போது, நமக்கு அதை வெளியே எங்கையும் கொட்ட தேவையில்ல இல்ல?
பார்வதி: ஆமா, அதான் இதோட பலமே. நம்ம வீட்டு கழிவுகள், நமக்கே பயன்படும், நம்ம சுற்றுபுறத்தையும் கழிவுகள் இல்லாம பாதுகாப்பா வைச்சுயிருக்கா உதவும்….
கூட்டத்தில் ஒரு பெண்…
கழிப்பறையை பயன்படுத்துவது பாதுகாப்பானதுன்னு தெரியும். ஆனா, அதை எப்படி ஊருக்கும், நமக்கும் நல்லதை கொடுக்கிற மாதிரி கட்டனுன்னு தெரிஞ்சுக்கிட்டோம்.



No comments:

Post a Comment