Wednesday, 15 June 2016

நம்முடைய குழந்தைகளின் பிரச்னைகள் புரிகிறதா?



”பள்ளியில் தினமும் கழிப்பறையை உபயோகம் செய்ய முடியும்., நான் அங்க இருக்கும் போது அதைத் தான் பயனபடுத்துவேன். ஆனால் மாலை ஆறு மணிக்கு மேல் வீடு திரும்பினால், காட்டுப் பக்கம் தான் போகனும். பாதுகாப்பான ஒரு இடத்தை பயன்படுத்திட்டு மறுபடியும், இப்படி வந்து போகும் போது ஒரு மாதிரி சங்கடமா தான் இருக்கும் என்ன செய்ய?” என தன்னுடைய ஆதங்கத்தை பள்ளி படிக்கும் பெண் குழந்தை பகிர்ந்துக் கொண்டார்.
இப்படி கழிப்பறையைச் சுற்றி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியான கதைகள் இருக்கின்றன. கிராமங்களில் திறந்தவெளியில் மலம் கழிப்பது இன்னும் நீடித்த வரும் நிலையில், மக்களின் பழக்கத்தை மாற்றி அமைக்க ஏதுவான காய்களை நாம் கண்டுணர்ந்து நகர்த்த வேண்டும்.
கிராமங்களில் நாம் செய்து வந்த வழக்கமான பயிற்சி முறையில் சில அடிப்படை பிரச்னைகள் இருக்கின்றன. இன்னும் நம்முடைய பழைய நகர்வுகளில் நின்றுக் கொள்ளாமல் புதிய மாதிரியான நவீன முறையில் காய்கள் மக்களின் நலனை முன்னிறுத்தி செய்ய வேண்டும்.
இதைதான் CLTS செய்து வருகிறது. இந்திய சுகாதார கொள்கையின் முக்கிய இலக்கான திறந்தவெளியில் மலம் கழித்தலற்ற கிராமங்களை உருவாக்க நடத்தை தொடர்பு பரிமாற்றம் மிகவும் முக்கியம்.
இது குறித்த விழிப்புணர்வு இன்று பெரும்பாலான மாநிலங்களில் அதிகரித்து, செயல்படவும் தொடங்கிவிட்டது. தமிழகத்தில் கிராம சுகாதாரத்தை இன்னும் வலுச்சேர்க்க கடந்த மாதம் ஐந்து நாட்கள் பயிற்சி ஏற்பாடு செய்யப்பட்டது.
இதில் தமிழகத்திலிருந்து பல மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் குறிப்பாக மகளிர் சுய உதவிக் குழுக்களில் இருப்பவர்கள், சுகாதார காவலர்கள், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் என பலரும் கலந்துக் கொண்டனர்.
மக்களின் தேவைகளில் கழிப்பறை உண்டா?

கிராமங்களில் கழிப்பறை என்பது மக்களின் முக்கிய தேவையாக கருதப்படுவதில்லை. அதே சமயம், சிலர் அரசாங்கம் வழங்கும் கழிப்பறை கட்டுவதற்கான கடனுதவியை பற்றிய விழிப்புணர்வு அடைந்து கட்டினாலும், அதை பயன்படுத்தாமல் திறந்தவெளியை தான் மீண்டும் பயன்படுத்துகின்றனர்.

இரண்டு வகையான மக்களும் நம் சமூகத்தில் தான் இருக்கின்றனர். இந்த நிலையை மாற்ற, பயிற்றுநர்கள் நடத்தை தகவல் தொடர்பில் வலிமை பெற்று, மக்களுக்கு கழிப்பறை அவசியத்தை உணர்த்த வேண்டும். இப்பயிற்சியின் மூலம் பல மாவட்டங்களிலிருந்து வந்த பயிற்றுநர்கள் களப்பணிக்கு தங்களை தயார்ப்படுத்திக் கொள்ள வாய்ப்பாக அமைந்தது.


திறந்தெவெளியில் மலம் கழித்தலற்ற கிராமத்தை உருவாக்க மனமாற்றத்தை முதலில் ஏற்படுத்தினால் தான் , மக்கள் தங்களுடைய தேவையை உணர்ந்து கழிப்பறை கட்டவும், அதை பயன்படுத்தவும் முன்வருவார்கள் என்ற வழிமுறையை அனைத்து பயிற்றுநர்களுக்கும் எடுத்துரைக்கப்பட்டது.

களப்பணியில் அறிந்த உண்மை-

பயிற்சியாளர்களுக்கு நேரடியாக உணர்த்த குழிபாந்தண்டலம் பஞ்சாயத்தை சேர்ந்த 4 குடியிருப்புகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, மக்களுக்கும், பயிற்சியாளர்களுக்கும் பயிற்சிகள் வழங்கப்ப்பட்டது. கிராம மக்களை ஒன்றுத் திரட்டி முதல் நாள் பயிற்சியின் போது, திறந்தவெளியில் மலம் கழிப்பதால் நம்முடைய உணவில் மலம் கலக்கிறது என்பதை மக்கள் முன், நேரடியாக பரிசோதனை செய்து காட்டப்பட்டது.

மேலும், தினமும் நாம் உண்ணும் உணவில் மலம் கலக்கிறது என்ற உண்மையை மக்கள் முன் நேரடியாக எடுத்துரைத்தபோது, மக்களிடம் அதிர்ச்சி அலை ஏற்பட்டத்தை உணர முடிந்தது.

இந்த உண்மை அப்பகுதி கிராம மக்களுக்கு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அதேசமயம் பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிய நிலையில் இருக்கும் குடும்பங்கள் உடனடியாக கழிப்பறையை கட்டுவதும் சாத்தியம் இல்லை. கழிப்பறை கட்டி முடிக்கும் வரை நாம், சில முன்னெச்சிரிக்கை பணிகளை செய்யலாம் என்றும் பயிற்சியாளர்களால் வலியுறுத்தினார்கள்.

கழிப்பறை கட்டும் வரை தற்காலிக தீர்வு ?

கழிப்பறை கட்டும் வரை, திறந்தவெளியில் மலம் கழித்து வருபவர்களை, மண்ணைப் போட்டு மூடலாம், இப்படிச் செயவதால் மலம் மூலம் வரும் கிருமிகளை தவிர்க்க முடியும்.

களப்பணியின் போது, இது மக்களிடம் விளக்கமாக சொல்லப்பட்டது, ஆனாலும் இதை தவராமல் கண்காணித்து மண் எடுத்து செல்கிறார்களா, அவர்கள் வீட்டில் கழிப்பறை இருந்தால் அதை பயன்படுத்த வேண்டும் போன்றவையை வலியுறுத்த கிராமத்திலேயே கண்காணிப்புக் குழு அவசியம்.

கிராம மக்களே கண்காணிக்கலாம்

களப்பணிக்கு சென்ற கிராமங்களிலேயே மக்களுள் சிலர் கண்காணிப்புக் குழுவுக்கு நியமிக்கப்பட்டு, யார் திறந்தவெளியில் மலம் கழிக்கிறார்கள், அவர்கள் உடனடியாக கையில் மண் எடுத்து செல்ல வேண்டும் என்பதை கிராம மக்களுக்கு எடுத்துரைத்தனர்.
இதை கண்காணிப்பு குழு எப்படி செய்கிறார்கள், இதை மற்ற கிராமங்களிலும் செயல்படுத்த முடியுமா போன்றவை பயிற்சியாளர்களும் கற்றுக்கொண்டனர். காலை 4 மணி முதல் பயிற்றுநர்களும் களத்திற்குச் சென்று கிராம மக்களுக்கு உதவியாகவும், அவர்களுக்கு தூண்டுதலாகவும் இருந்தனர்.





புதிய தொழிநுட்பமும், பாதுகாப்பும்

மேலும், முக்கியமாக கழிபப்றை கட்ட, அதிக பணச் செலவு ஆகும் என்ற பிமபத்தை இந்த பயிற்சி உடைத்தது. கழிப்பறையை மாற்று தொழில்நுட்ப முறையில், குறைவான தொகையில் கட்ட முடியும் என்பதை பயிற்றுநர்கள் பயிற்சியின் போது மக்களுக்கு தெளிவுப்படுத்தினார்கள்.

பாதுக்காப்பு முறையான ”லீச் பிட்”முறை ஏன் கிராமங்களுக்கு தேவை, அதன் மூலம் மக்களுக்கு ஏற்படும் லாபம், சுற்றுச்சூழலுக்கான நன்மைகள் இந்த பயிற்சியின் போது எடுத்துரைக்கப்பட்டது. ஐந்து நாட்கள் வழங்கப்பட்ட தீவிர பயிற்சியின் மூலம் மக்களிடம் கழிப்பறை என்பது தேவை பட்டியலில் சேர்க்கப்பட்டது. மேலும் அவர்களின் சிந்தனையை தூண்டச்செய்தது. பயிற்சியின் இறுதி நாளில் பலரும் கழிப்பறை கட்ட முன் வந்தார்கள். குழிப்பாந்தண்டலம் கிராமத்தைச் சேர்ந்த மூதாட்டி, தனக்கும் கழிப்பறை வேண்டும் என்றும், எங்களை கையோடு எங்கு கட்ட வேண்டும் என்று கேட்டு அழைத்துச் சென்றார்.

இவரிடம் கண்ட இந்த மனமாற்றம் தான் பலர் கிராமங்களில் இனிவரும் காலங்களில் காணமுடியும் என்ற நம்பிககையோடு பயிற்றுநர்கள் அவரவர் கிராமங்களில் மக்களுக்காக குரல் கொடுக்க தொடங்கியிருக்கின்றனர். இன்னும் சில ஆண்டுகளில் இந்த குரல்களுக்கான பலன் கிடைத்து விடும் என்று நம்பிக்கை அனைவரிடத்திலும் பார்க்க முடிகிறது.





No comments:

Post a Comment